பேரவை தேர்தலில் இரு​முனை போட்டியே நிலவும்: திருமாவளவன் கருத்து

பேரவை தேர்தலில் இரு​முனை போட்டியே நிலவும்: திருமாவளவன் கருத்து

சென்னை:

​சட்டப்பேரவை தேர்தலில் இரு​முனை போட்டி தான் நிலவும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்​களுக்​கான பள்​ளி, கல்​லூரி விடு​தி​களை சமூக விடு​தி​கள் என அறி​வித்​தமைக்​காக சென்​னை, திமுக தலை​மையகத்​தில் முதல்​வர் ஸ்​டா​லினை விசிக தலை​வர் திரு​மாவளவன் மற்​றும் எம்​எல்​ஏ-க்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.


பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறிய​தாவது: பெரி​யார் வழி​யில் படிப்​படி​யாக சாதிமத அடை​யாளங்​களை துடைத்​தெறி​யும் வகை​யில் செயல்​படும் முதல்​வருக்கு பாராட்டை தெரி​வித்​தோம். மேலும், தேர்ச்சி பெற்ற 5,493 பேருக்கு கேங்​மேன் பணி வழங்க வேண்​டும். அரசு கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கணினி பயிற்​றுநர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வலி​யுறுத்​தினோம்.


பாஜகவோடு எந்த காலத்​தி​லும் கூட்​டணி வைக்க மாட்​டோம் என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா சொன்​னார். ஆனால், இப்​போது கூட்​டணி வைத்​துள்ள அதி​முக​வினர் ஜெயலலி​தா​வின் வாரிசுகளா அல்​லது மத்​திய அமைச்​சர் அமித் ஷாவின் வழித்​தோன்​றல்​களா என தெரிய​வில்​லை. கூட்​ட​ணிக்கு தலைமை அதி​முகவா பாஜகவா என தெரிய​வில்​லை. தேசிய ஜனநாயக கூட்​டணி என்​றால் பாஜக தலைமை தாங்​கு​கிறது என்று தானே பொருள்.


தமிழகத்தை பொருத்​தவரை இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்​தா​லும், திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யாகவே இருக்​கிறோம். அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு என்ன பெயர். முதல்​வரை மோடி தீர்​மானிப்​பார் என்​ப​தால் அதி​முக​வின் நிலை கவலைக்​குரிய​தாக இருக்​கிறது. வரும் தேர்​தலைப் பொருத்​தவரை இரு​முனை போட்டி தான். திமுக, அதி​முக ஆகிய அணி​களை தான் மக்​கள் சீர்​தூக்கி பார்ப்​பார்​கள்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%