
வேலூர், ஜூலை 18-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர திமுக நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமது தலைமை வகித்தார். குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளான பி. சின்னா என்கிற கொற்கை பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் டி. அப்துல் ஜமீல், நுரேசபா ஹர்ஷத் அஹமத், சுல்தானா அப்துல் பாசில் மற்றும் நகர, மாவட்ட திமுகவைச் சேர்ந்த சி. தௌபிக் அஹமத், எம். கே. ஐஹுர் அஹ்மத், 3வது வார்டு திமுக செயலாளர் சின்னா என்கிற யாக்கோபு, எல். பிரதாப் ,நகர மன்ற தலைவர் பிரேமாவின் சார்பில் அவரது கணவர் வெற்றி வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?