அன்னம் போலப் பெண் ஒருத்தி கன்னம் சிவந்திட மலரானாள்
கொவ்வைக் கனி இதழ் மழலையிலே கொஞ்சிப் பேசும் கிளியானாள்
கிளி மொழியாள் இசை பாடலிலே கீதம் பொழியும் குயிலானாள்
குயிலிசைப் பெண் அவள் ஆடலிலே கோலத் தோகை மயிலானாள்
மயிலின் ஒயிலுடன் மலர்க் கொடியாள் மைவிழி காட்டிட மான் ஆனாள்
மான் போல் மருண்ட பெண் அவளும் மலர்முகம் ஒளிதரும் மதியானாள்
மதியைப் பழிக்கும் மங்கை அவள் மயக்கிடும் மொழியில் தேன் ஆனாள்
தேன் சுவை இதழ்கள் சிரித்திடவே தெய்வக் கவிதை வடிவானாள்
மீனாட்சி பாண்டியன் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%