காத்திருப்பு

காத்திருப்பு

 


காலங்கள் ஓடுவதும் 

நிற்பதும் நகர்வதும்

இயற்கையின் செயலல்ல 

மனதின் ஓட்டங்கள் 


யுகம் யுகமாய் பூமியின்

சுழற்சியில் மாற்றமில்லை 

வேகத்தில் மாற்றமில்லை

தடுமாற்றம் என்றுமில்லை


மனது என்றுள்ளது

மனிதனுக்கு மட்டுமே

ஆறறிவு என்பதனாலே 

மனமென்ற ஒன்றும் உளதோ ?


சிந்திக்கும் மனமுடனே

காலங்கள் ஓடுவதும் 

இயற்கையின் பிம்பம் போலும்

ஒட்டிக் கொள்கிறது உள்மனதில்


சந்தோஷம் என்றானால் 

காற்றாடி ஆகிடும் உள் மனது

இயற்கையின் விதிவிலக்காய் 

ஓடிடும் நேரமும் வேகமாய் 


கவலைகள் அணைக்கையிலே 

காற்றும் நகராதது போலும்

இமைப் பொழுது நொடியும்

யுகமாய் மாறிடும்


தன்னை அறிந்தவனுக்கு 

தன்னிலை உணர்த்தவனுக்கு

நாளும் நேரமும் 

நகர்ந்திடுமே ஒரு சேர


இயற்கை பொய்ப்பதில்லை 

தன்னிலையில் தானாய்

என்றும் போல் சுழன்றிடுமே

நாமும் உடன் வாழ்ந்திடுவோம் 


ஓம் குமார் P N

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%