news Breaking News
clock

மாநில அந்தஸ்து பெற்று புதுச்சேரியை முதன்மை மாநிலமாக ஆக்குவோம்-திமுக உறுதி

மாநில அந்தஸ்து பெற்று புதுச்சேரியை முதன்மை மாநிலமாக ஆக்குவோம்-திமுக உறுதி



புதுச்சேரி, ஜன.13- 

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து நாட்டிலேயே முதன்மையாக மாற்றுவோம் என திமுக கொள்கை பரப்பு செயலர் ஜெகத்ரட்சகன் எம்பி உறுதி அளித்தார்.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி திமுக சார்பில், திராவிட பொங்கல் விழா மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் எதிரில் நடந்தது. மாநில திமுக அமைப்பாளர் சிவா தலைமை வகித்தார். விழாவை திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி துவக்கி வைத்தார். ஏராளமான மகளிர் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.  

விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசுகையில், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து, இந்தியாவின் தலைசிறந்த‌ மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு திமுக அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவகிறது. உங்களில் ஒருவராக, உங்களுக்காக ஓடோடி உழைப்பதற்கும், உங்களுக்கு பணி செய்ய உத்தரவிடுங்கள் என கேட்டு நாங்கள் வந்துள்ளோம். திமுக தாய் பாசம் மற்றும் சகோதர பாசம் கொண்ட இயக்கம். புதுச்சேரியை பொருத்தவரைக்கும் இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையும், வளமான வலிமையான புதுச்சேரியை உருவாக்குவதற்கு திமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை" என்றார்.

 விழாவில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News