பள்ளிக்கூடம் வெகு தூரம் தான்...
இவர்களுக்கு...
வஞ்சிக்கப்பட்ட மழலை உள்ளங்கள்...
பிஞ்சு விரல்கள்
பிசைந்த ஊதா நிற உருண்டை..
நஞ்சை நாளும்
நக இடுக்கில் வண்ண சாயம் இட்டு..
முத்துப்
பல்வரிசை
முகத்தை அலங்கரிக்க..
கள்ளம் கபடம் அற்ற துள்ளித் திரியும் அழகிய மழலைகளின் மகிழ்வில் ..
மரம் பெட்டியில் அடுக்கப்பட்ட குச்சிகள்...
இருண்டு வீட்டிற்கு ஒளியேக் கொடுத்தது..
இவர்களுக்கோ வலியை கொடுத்தது..
இதயத்தின் கூடாரம் பூட்டப்பட்டது..
சவப்பெட்டியின் பூட்டு
உடைக்கப்பட்டது..
குழந்தைத் தொழிலாளர்கள்
காகித மலர்களாக
வாசமற்று மலர்கின்றனர்..
உயிர்பில்லா புன்னகையுடன்...
கவிஞர் முனைவர் நா மோகன செல்வி மனோகரன் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?