பூமியின் சொர்க்கம் இங்க தான் இருக்கு! தேனிக்கு போன கட்டாயம் விசிட் பண்ணுங்க... கம்மி பட்ஜெட் போதும்!
ஆண்டின் பெரும்பாலான அனைத்து நாட்களிலும் குளிர் காற்று வீசும், பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஒரு மலைப்பிரதேசம் தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இந்த இடத்தை டைட்டானிக் படத்தின் ஹீரோ (லியோனார்டோ டிகாப்ரியோ) புகழ்ந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பார்க்க வேண்டிய இடங்கள்
காற்றாலை பண்ணை, இடுக்கி ஆர்ச் அணை, குறவன் குறத்தி சிலை,ராமக்கல் சிகரக் காட்சி, ஆமை பாறை, ஆமை பாறை ஜீப் சஃபாரி, இயற்கைக் காட்சிப் புள்ளி, திராட்சை பண்ணை, தேயிலை தோட்டங்கள், தமிழ்நாடு வியூ, நீலக்குறிஞ்சி மலைகள், கம்பம் பள்ளத்தாக்கு காட்சி, ஹார்ன்பில் டவர், தூவல் நீர்வீழ்ச்சிகள் இங்கு தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும். தன் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற லங்கா அரசன் ராவணனைத் தேடுவதற்காக ராமர் தனது கால்களை ராமக்கல்மேடு முனையில் வைத்ததாக இந்த இடத்தின் பின்னணியில் உள்ள கதை கூறுகிறது.
சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது கேரளா என்பது நாம் அறிந்ததே. அதில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா எல்லைகளில் இருக்கும் சுற்றுலா தலங்கள் புகழ்பெற்ற இடங்களாக உள்ளன. அப்படி ஒரு பசுமை போர்த்திய அழகிய மலை முகட்டில் இருக்கும் இடத்தைப் பற்றி பார்ப்போம்.
ராமக்கல்மேடு மலைவாசஸ்தலம்
மலையுடன் பசுமை போர்த்திய அழகான ராமக்கல்மேடு மலைவாசஸ்தலம், கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம், கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது.
எப்படி செல்வது?
மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். மூணாறு - தேக்கடி சாலையில் நெடும் கண்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ராமக்கல்மேடு உள்ளது. தமிழ்நாட்டின் தேனி, கம்பம், குமளி வழியாக இந்த இடத்திற்கு எளிதாக செல்லலாம்.
அழகிய வியூ பாயிண்ட்கள்
அனைத்து பருவங்களிலும் இங்கு மணிக்கு 35 கிமீ வேகத்தில் காற்று வீசும். குளிர்ந்த காற்று, பசுமையான மலைகள் என ராமக்கல்மேடு வியக்க வைக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் இருந்து தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை காண முடியும். செப்டம்பர் முதல் மே மாதம் வரை இங்கு சீசன் காலம்.
பட்ஜெட் சுற்றுலா
செல்லும் வழியெங்கும் பச்சை பசேலென்ற காப்பி, தேயிலை தோட்டங்களை பயணத்தில் ரசிக்கலாம்.
தேனி கம்பம் மெட்டு வழியாக 10 கி.மீ பயணித்தால் ராமக்கல்மேடு சென்று விடலாம். பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். ராமக்கல்மேடு மலையேற்றம் செய்ய சூப்பர் ஸ்பாட் ஆகும். மலையேற்றத்தில் குளிர் காற்று, பசுமையான மலைகள், தேயிலை தோட்டங்களின் காட்சி நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்தும்.
பூமியின் சொர்க்கம் ராமக்கல்மேடு
பிரபல டைட்டானிக் படத்தின் ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ ராமக்கல்மேடு குறித்து 'பூமியில் சொர்க்கம் இருந்தால் அது இங்கே தான்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமக்கல்மேடு என்ற அழகிய இடத்துக்குச் செல்லாமல் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குச் செல்வது முழுமையடையாது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்த மலைவாசஸ்தலத்தில் இருந்து தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை காண முடியும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
காற்றாலை பண்ணை, இடுக்கி ஆர்ச் அணை, குறவன் குறத்தி சிலை,ராமக்கல் சிகரக் காட்சி, ஆமை பாறை, ஆமை பாறை ஜீப் சஃபாரி, இயற்கைக் காட்சிப் புள்ளி, திராட்சை பண்ணை, தேயிலை தோட்டங்கள், தமிழ்நாடு வியூ, நீலக்குறிஞ்சி மலைகள், கம்பம் பள்ளத்தாக்கு காட்சி, ஹார்ன்பில் டவர், தூவல் நீர்வீழ்ச்சிகள் இங்கு தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
தன் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற லங்கா அரசன் ராவணனைத் தேடுவதற்காக ராமர் தனது கால்களை ராமக்கல்மேடு முனையில் வைத்ததாக இந்த இடத்தின் பின்னணியில் உள்ள கதை கூறுகிறது.