புற்றுநோயால் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சமாக உயரும்: ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில்
புதுடில்லி: நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டிற்குள் 20 லட்சமாக உயரும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் ஜிஜேந்திர சிங் பதிலளித்து கூறியதாவது:
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக புற்றுநோய் பாதிப்பில் இந்தியா தற்போது உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு சுமார் 14 முதல் 15 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது 2040-ஆம் ஆண்டிற்குள் 20 லட்சமாக உயரும்.
நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தாலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது புற்றுநோய் பாதிப்பு உயர ஒரு முக்கிய காரணமாகும்.
புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் முந்தைய காலத்தை விட தற்போது இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுவது கவலைக்குரியது.கர்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹச்பிவி தடுப்பூசியை உயிரித் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது. இதை மலிவு விலையில் அல்லது இலவசமாக வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.
நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. தற்போது 11 டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன, அதில் 9 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.இவ்வாறு ஜிஜேந்திர சிங் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?