புத்த மதத்துக்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் தர வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு
Oct 09 2025
41
பெங்களூரு: கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது.
கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக அரசு 2013-ல் வெளியிட்ட சுற்றறிக்கையிலும் இந்த விஷயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடமும் புத்த மதத்தினராக மாறிய பட்டியலினத்தவர் எஸ்சி சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
எனவே கல்வி, வேலைவாய்ப்பு தேவைக்காக புத்த மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகிறது. இந்த உத்தரவை அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?