புது கவிதைகள்...

புது கவிதைகள்...



1. சில உறவுகள் தருவது பாசம்

சில உறவுகள் தருவது பாடம்

பாசம் என்றால் பெற்றுக் கொள்வோம்

பாடம் என்றால் கற்றுக்கொள்வோம்



2. ஆதங்கம் வெளியே வந்து விட்டால்

வைராக்கியம் தோற்றுப் போகும்



3. நேத்து கறிசோறு சமைத்த பாத்திரம் இன்று சைவக் கடவுளுக்கு சமைத்துக் கொண்டு இருக்கிறது

எல்லாத்தீட்டையும் பத்து ரூபாய் வாஷிங் பவுடர் தீர்த்து வைத்து விட்டது 



4. சாப்பிட்டாச்சா என்று கேட்டால் அவன் நண்பன்

சரக்கு சாப்பிடுவோமா என்று கேட்டால் அவன் உயிர் நண்பன்



5. தர்மத்தை தேடி போய் செய்ய வேண்டும்

உதவியை நாடி வருபவருக்கு செய்ய வேண்டும்



6. அன்று வயதை பார்த்து வந்தது

இன்று வசதியை பார்த்து வருகிறது 

மரியாதை.



7. மான் எவ்வளவு அழகாக இருந்தாலும் புலி அதை ரசித்து பார்ப்பது இல்லை ருசித்துத்தான் பார்க்கிறது



நடேஷ் கன்னா 

கல்லிடைக் குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%