புதின் அழிந்து போகட்டும்: சாபம் இட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

புதின் அழிந்து போகட்டும்: சாபம் இட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி


 

கீவ்,


ரஷியா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு அமெரிக்க டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கிடையே, அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. இதனால், ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது: "ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமிக்கவோ குண்டு வீசவோ முடியாது. உக்ரைன் மக்களின் இதயம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமைதான் அது..இன்று, நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும்தான் உள்ளது. அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.ஆனால், இதனைவிட பெரிய ஒன்றை நாம் கடவுளிடம் கேட்கிறோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் " என்று தெரிவித்துள்ளார்



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%