பிரேசிலில் மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாற்ற மாநாட்டு அரங்கில் தீ விபத்து
Nov 23 2025
32
பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் கலந்து கொண்ட நிலையில், மாநாட்டு அரங்கில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் நேற்று எரிபொருள்கள், காலநிலைக்கான நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். மாநாடு நிறைவடைய ஒரு நாள் மட்டும் இருந்த நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் அவதியடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் பங்கேற்ற நிலையில் அவர்கள் பத்திரமாக உள்ளனர்.
அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்து தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கு மின்கசிவுகூட காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள் என பிரேசிலின் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?