
சென்னை:
பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் 26-ம் தேதி ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அன்றிரவு விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர், 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்றார். பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், ஆக.26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை கோயில்களில் தரிசனம் செய்ய இருப்பதாகவும், தரிசனத்தை முடித்துவிட்டு, சிதம்பரத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?