உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்

உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்

சென்னை:

உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி, வரும் ஆகஸ்ட் மாதத்​துக்​கான 45.95 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்​துக்கு வழங்​கு​வதை கர்​நாடகா உறுதி செய்ய வேண்​டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில் தமிழக அரசு வலி​யுறுத்​தி​யது.


இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 42-வது கூட்​டம் ஆணையத்​தின் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தார் தலை​மை​யில் டெல்​லி​யில் 30-ம் தேதி (நேற்​று) நடை​பெற்​றது.


இக்​கூட்​டத்​தில் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் தமிழக உறுப்​பினர் மற்​றும் நீர்​வளத்​துறை​யின் செயலர் ஜெ.ஜெய​காந்​தன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்​த​படி காணொலிக் காட்சி வாயி​லாக கலந்​து​கொண்​டார்.


அப்​போது அவர் தற்​போது மேட்​டூர் அணை​யின் நீர்​இருப்பு அதன் முழு கொள்​ளள​வான 93.470 டி.எம்​.சி ஆக இருப்​ப​தை​யும், கிருஷ்ண ராஜ​சாகர், கபினி அணை​களில் இருந்து அதி​க​மான உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வ​தால் மேட்​டூர் அணைக்கு இன்று காலை நீர்​வரத்து விநாடிக்கு 1 லட்​சத்து 12,555 கனஅடி​யாக இருந்த நிலை​யில் தற்​போது குறைந்து வரு​வ​தாக​வும் எனவே, நிலை​மைக்கு ஏற்ப மேட்​டூர் அணையி​ல் இருந்து நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது என்​றும் தெரி​வித்​தார்.


மேலும், கர்​நாடக அணை​களின் நீர் இருப்பு மற்​றும் நீர்​வரத்து கணிச​மான அளவு தொடர்ந்து வரு​வ​தா​லும், தமிழகத்​துக்கு வரும் ஆகஸ்ட் மாதத்​துக்கு வழங்​கப்பட வேண்​டியநீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்ச நீதி​மன்ற ஆணை​யின்​படி கர்​நாடகா உறுதி செய்யு​மாறு ஆணை​யத்தை வலி​யுறுத்​தி​னார். இக்​கூட்​டத்​தில் காவிரி தொழில் ​நுட்​பக் குழு​மத்​தின் தலை​வர் ஆர்​.சுப்​பிரமணி​யன், அரசு உயர் அலு​வலர்​கள் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%