பாதை மாறியது

பாதை மாறியது



     " ராகவன் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி . ஒரே மகள் லலிதா திருமணம் ஆகிவிட்டது . மனைவி ராஜம் இல்லத்தரசி .


        தினமும் ராஜன் காலை மாலை இருவேளையும் தவறாமல் நடைப் பயிற்சிக்கு அருகில் இருக்கும் ராயல் பூங்காவிற்கு வந்து விடுவார் .


       காலையில் பேப்பர் படிப்பது குளிப்பது டிபன் பிறகு டி.வி. அதன் பிறகு செல்போன் பார்ப்பது மதிய உணவு அதன் பிறகு ஒரு குட்டித் தூக்கம் மாலையில் மீண்டும் வாக்கிங் , பிறகு யாராவது போனால் வந்தால் பேசுவது . இரவு உணவு பின் உறக்கம் என்பது வாடிக்கை .


      ராகவன் வீட்டில் தினமும் சண்டை ராஜம் வீட்டு வேலை எதுவுமே செய்வதில்லை வெளியில் எங்கும் அழைத்து செல்வதில்லை அதிகார பேச்சு என்று கடிந்து கொள்வாள் .


      ராகவன் எதையும் காதில் போட்டுக் கொள்வதில்லை . தன் வழி தனி வழி என்று இருப்பார். அதனால் வாக்கிங் வரும் போது டென்ஷனாக இருப்பார் .


       ராகவன் நண்பர் ராமன் இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டே வாக்கிங் செல்வார்கள் . ராகவன் அடிக்கடி போர் அடிக்குது நேரம் போக மாட்டேங்குது என்பார் .


       ராமன் அடிக்கடி எனக்கு நேரமே இல்லை வீட்டு வேலை சரியாக இருக்கு பராமரிப்பு , துணி துவைப்பது காய வைத்து மடித்து அயர்ன் செய்து உடுத்துவது , காலையில் குடிநீர் பிடித்து வைப்பது மனைவிக்கு சமையலில் உதவி செய்து என்று சொல்லி தன் வாழ்க்கை முறையை ராகவனிடம் சொல்வார் .


       வீட்டு வேலை சமையல் வேலை எல்லாம் வீட்டுப் பெண்கள் செய்யும் வேலை ஆணாக இருந்தால் வெளி வேலை மட்டும் தான் செய்ய வேண்டும் என்பார் .


        சில மாதங்கள் நகர ராமன் மனைவி இறந்து விட்டாள் . ராமன் காரியங்கள் முடிந்த பிறகு வாக்கிங் வரத் தொடங்கினார் .


        ராகவன் டேய் ராமா உன் மனைவி இல்லாம எப்படி தனியா உன்னால வாழ முடியுது சமையல் சாப்பாடு எப்படி , உன் முகத்துல கவலை இல்லையே எப்படி என்றார் .


        ராகவா என் மனைவி போனது பெரிய இழப்பு தான் அதுக்காக வீட்டுல முடங்கி இருக்க முடியுமா ...? என் மனைவியோட சேர்ந்து சமைத்து விட்டு வேலை செய்தது எனக்கு இப்ப பெரிய உதவியா இருக்கு வீட்டுக் கவலையும் தெரியல என் மனைவி பிரிவு மட்டும் தான் அதிகமா இருக்கு என்றார் .


        ராகவனுக்கு பொறி தட்டியது போல் இருந்தது . இழந்த சுகத்தை திரும்பிப் பெற முடியாது , தவறு செய்து விட்டோம் எப்படியோ வாழ வேண்டிய வாழ்க்கை இப்படி நிம்மதி இல்லாமல் வாழ்கிறோம் என்று இரவு உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து யோசித்தார் கடைசியில் உறங்கிப் போனார் . 


      மறு நாள் காலையில் புது மனிதனாக எழுந்தார் . எண்ணம் தெளிவாக இருந்தது . விட்டுக் கொடுக்கும் மனம் வெகுவாக மலர்ந்தது .


       வீட்டு வேலையில் ஈடுபட துவங்கினார் , ராஜம் செய்யும் வீட்டு வேலைக்கு உதவி செய்வது, தன் மனைவியிடம் மனம் விட்டு பேசுவது வெளியில் அழைத்து செல்வது என்று தன் ஆண் ஆதிக்கத்தை விட்டு விட்டு ப்ரண்ட்லியா மாறிவிட்டார் ராகவன் .


       ராகவன் இப்போது இளைஞர் போல சுறுசுறுப்பு மகிழ்ச்சியாக தென்பட்டார் .


         தன் நண்பன் ராமனுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி தெரிவித்து மன நிறைவு கண்டார் ராகவன் .


- சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%