
பாதக் கொலுசோ
பலவிதமாய் இங்கே
பார்ப்பவரை ஈர்க்கும்
ஒருவிதமாய் இங்கே!
ஆர்க்கும் அழகை
அற்புதமாய்க் காட்டும்!
கோர்க்கும் முத்துக்கள்
குலுங்கிச் சிரிக்கும்!
யார்க்கும் ஒலிதந்து
யானுள்ளேன் என்றோ
சேர்க்கும் அழகை
சிங்காரி பாதத்திற்கு!
ஐவிரல் இரண்டாய்
அங்கே சேர்ந்து
பையவே நடக்கையில்
பாதம் மெருகேறும்!
மெய்யாய் அழகா
மிருதுவுன் பாதமா?
செய்வது சிறப்பா
செம்பொன் கொலுசா?
வைரமணி
சென்னை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%