வாஷிங்டன்: பாகிஸ்தானும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நாங்களும் அதை நடத்த போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். 33 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அணு ஆயுத சோதனையை துவங்குகிறது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பேட்டியின் போது அவர் வெளியிட்டு உள்ளார்.
பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது;
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றன. ஆனால் அவர்கள் இதை பேச மாட்டார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதால் இதை (அணு ஆயுத சோதனையை குறிப்பிடுகிறார்) பேசுகிறோம்.
மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர். நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள். உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும், இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும்.
நாங்களும் இந்த சோதனையை (அணு ஆயுதம்) நடத்த இருக்கிறோம். ஏன் என்றால் அவர்கள் (பாக். சீனா, வடகொரியா, ரஷ்ய நாடுகளை குறிப்பிடுகிறார்) நடத்துகின்றனர். அவர்கள் சோதனை செய்வதாலும், மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகிறது, பாகிஸ்தானும் சோதனை செய்து வருகிறது.
இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது. ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகிறார்கள்.
சோதனை செய்யாத ஒரேநாடு அமெரிக்கா தான். சோதனை செய்யாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. மற்ற நாடுகளின் சோதனை காரணமாக, நாங்களும் சோதனை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். அந்த செயல்முறை உடனடியாக தொடங்கும்.
இவ்வாறு தமது பேட்டியில் டிரம்ப் கூறி இருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?