பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.


ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 152 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 186 கிலோ என மொத்தமாக 338 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தார்.


இதில் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் பிரிவுகளில் அவர் தூக்கிய எடைக்கு தனியே இரு வெண்கலப் பதக்கங்கள், மொத்த எடைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் என 3 பதக்கங்கள் அவர் பெற்றார்.


இப்போட்டியில் ஏற்கெனவே மகளிருக்கான 44 கிலோ எடைப் பிரிவில் பங்குனி தாரா வெள்ளி வென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%