நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் பெயர் பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்: தேர்தல் ஆணையம்

நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்தவர்களின் பெயர் பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி:

பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்​து, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது.


தேர்​தல் அலு​வலர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியலில் உள்​ளவர்​களின் பிறப்பு சான்​றிதழ் உள்​ளிட்ட ஆவணங்​களை சரி​பார்த்து வரு​கின்​றனர். இந்த நடவடிக்​கையை எதிர்த்து எதிர்க்​கட்​சிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளன. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், ஆதார், வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவண​மாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.


இந்​நிலை​யில், பிஹாரில் நேபாளம், வங்​கதேசம் மற்​றும் மியான்​மர் நாடு​களை சேர்ந்த ஏராள​மானோர் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ள​தாக தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். பக்​கத்து நாடு​களில் இருந்து சட்​ட​விரோத​மாக குடியேறிய​வர்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அவர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படு​வார்​கள் என அந்த அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். அதன் பிறகு வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


அடுத்த ஆண்டு பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், கேரளா, புதுச்​சேரி உட்பட நாடு முழு​வதும் இது​போன்ற வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி நடை​பெறும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%