நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் எப்போது? அமைச்சர் பதில்

நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர்   வெள்ளோட்டம் எப்போது? அமைச்சர் பதில்


திருநெல்வேலி, ஜூலை 9

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கோடியில் வெள்ளித்தேர் உருவாக்கும் பணி அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ஆசியாவிலேயே 3-வது பெரிய திருத்தேர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருத்தேராகும். இக்கோயிலில் ரூ.59 லட்சம் செலவில் புதிதாக ஸ்ரீசண்டிகேஸ்வரர் திருத்தேர் செய்யப்பட்டுள்ளது.

 ரூ.6.50 லட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு புதிதாக 6 வடகயிறுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 லட்சம் மதிப்பில் சுவாமி தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேருக்கு புதிதாக மரக்குதிரை, மர பிரம்மா, அம்பாள் தேருக்கு மரத்தினால் பிரம்மா மற்றும் மர யாழி செய்யப்பட்டுள்ளது. ரூ.5.54 லட்சம் மதிப்பில் விநாயகர் தேருக்கு புதிதாக இரும்பு சக்கரம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ரூ.9.92 லட்சம் மதிப்பில் சுவாமித்தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேருக்கு புதிதாக தேர் துணி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.37.60 லட்சம் செலவில் புதிய திருத்தேர் கொட்டகைகள். ரூ.1.43 கோடி மதிப்பில் அம்மன் சந்நிதி மேற்கூரை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெள்ளித் தேர்

 மேலும், ரூ.99 லட்சம் மதிப்பில் அம்மன் சந்நிதி வளாகத்தில் 2-ம் பிரகாரம் கல்மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.32.60 லட்சம் மதிப்பில் பக்தர்களின் பொருட்களை பாதுகாக்கும் வகையில் பொருட்கள் வைப்பறை மற்றும் காலணிகள் பாதுகாப்பகம், ரூ.14.70 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள், ரூ.1.60 கோடி மதிப்பில் கருஉருமாறி தீர்த்தக்குளம் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி ரூ.5 கோடி செலவில் 450 கிலோ வெள்ளியை கொண்டு புதிய வெள்ளித்தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.35 லட்சம் செலவில் வெள்ளித்தேருக்கான மரத்தேர் பணி நிறைவடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%