நூறு சதவிகிதம் சிரிப்பு

நூறு சதவிகிதம் சிரிப்பு

*சிலர் வித்தியாசமாக செயலை செய்வார்கள்...* *காரணம் கேட்டால் அதற்கும் வித்தியாசமான காரணம் சொல்வார்கள்...* *அதைக் கேட்பவருக்கு நூறு சதவிகிதம் சிரிப்பு வந்து விடும்...*


1 கோவிந்தன் தன்னுடைய சட்டையின் முன்புறத்தை பேண்ட்டுக்குள் in பண்ணியிருக்கிறான்... சட்டையின் பின்புறத்தை in பண்ணாமல் வெளியில் விட்டிருக்கறான்.


இதைப் பார்த்த ராமன் கோவிந்தனிடம் " என்னப்பா இது... எல்லாரும் சட்டையை in பண்ணுவாங்க இல்லைன்னா வெளியில் விட்டுருப்பாங்க.. நீ ஏம்பா சட்டைய முன்னால in பண்ணியிருக்கே... பின்னால வெளியில் விட்டுருக்கே..!? " என்று கேட்கிறான்.


அதற்கு கோவிந்தன் , " அது ஒண்ணுமில்ல... முன்னால சட்டை கிழிஞ்சிருக்கு... அதை மறைக்கறதுக்காக in பண்ணியிருக்கேன்...! " அப்படின்னான்.


ராமன் , " அது சரி... அப்ப ஏன் சட்டைய பின்னால வெளியில் விட்டுருக்கே..!? " ன்னு கேட்கிறான்.


அதற்கு கோவிந்தன் , 

" பின்னால பேண்ட் கிழிஞ்சிருக்குப்பா..! " அப்படின்னுட்டு போய்ட்டான்.


---------------------------------------------


2 ரமேஷ் தன்னோட வலது கையில் ஒரு வாட்ச்... இடது கையில ஒரு வாட்ச் கட்டியிருக்கிறான்...


அதைப் பார்த்த சுரேஷ், " எல்லாரும் கையில ஒரு வாட்ச்தான் கட்டுவாங்க... நீ ஏம்பா வலது கையில ஒரு வாட்ச்... இடது கையில ஒரு வாட்ச் கட்டியிருக்கே...!? " ன்னு கேட்கிறான்.


அதற்கு ரமேஷ், 

" ஒண்ணுல சின்ன முள் ரிப்பேர்... இன்னொண்ணுல பெரிய முள் ரிப்பேர்...! " அப்படின்னு சொல்றான்


---------------------------------------------


3 ஒரு கிராமத்து கோவில் விசேஷத்துல ஒரு மைதானத்துல ஒருத்தர் இடைவிடாமல் ஏழு நாட்களா சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருக்கறாரு... ஒரு சிறிய இடைவெளி நேரத்துல ஒருத்தர் பேட்டியெடுக்கறாரு...


" இப்படி இடைவிடாம சைக்கிள்ல்ல சுத்திக்கிட்டு இருக்கீங்களே... உங்களுக்கு பொண்டாட்டி ஞாபகமே வராதா...!? " ன்னு கேக்கறாரு.


அதற்கு சைக்கிள் ஓட்டறவரு , " என் பொண்டாட்டி ஞாபகம் வரக்கூடாதுன்னுதான் இப்படி சைக்கிள் ஓட்டிட்டுருக்கேன்...! " அப்படின்னு சொல்றாரு.



லட்சுமி ஆவுடைநாயகம்,

மடிப்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%