“ லாவண்யா, இங்க தனியா என்னால இருக்க முடியல்ல. பைத்தியமே பிடிச்
சிடும் போல இருக்கு. துணைக்கிருந்த உங்கப்பாவும் போய் சேர்ந்துட்டார். அதனால நான் அங்க வந்து உங்கக் கூட இருக்கலாமான்னு மாப்பிள்ளைக் கிட்ட தயவு செய்து கேட்டு அனுமதி வாங்கேன் .”
மறுமுனையில் அம்மா புலம்பித் தீர்த்ததைக் கேட்ட லாவண்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
பெற்றோருக்கு ஒரே மகள் லாவண்யா. தந்தைக்கு மத்திய அரசைச் சார்ந்த ஒரு
அலுவலகத்தில் வேலை. காலம் கடந்து பிறந்த மகளை போஸ்ட் கிராட்ஜு வேஷன் வரை படிக்க வைத்தார். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு மகளை பிரகாஷு க்கு மணம் செய்து வைத்தார். சில நாட்களில் மாரடைப்பில் போய்ச் சேர்ந்தார் லாவண்யாவின் தந்தை. குடும்ப ஓய்வூதியம் கிடைத்து வருகிறது அவள் தாய்க்கு. ஆனால் வாடகை வீடுதான் !
லாவண்யாவின் அம்மா இப்படிக் கேட்பது இரண்டாவது தடவை !
“ அம்மா, கொஞ்ச நாள் பல்லைக் கடிச் சிக்கிட்டு பொறுமையாக இருந்துக்கோ.
நான் உன் மாப்பிள்ளைக் கிட்டே நைஸா கப் பேசி உன்னை அழைச்சிக்கிறேன்.”
என்று ஃபோனை கட் செய்தாள் லாவண்யா.
பின் பக்கம் நின்றவாறு லாவண்யா தன் அம்மாவிடம் பேசியதைக் கேட்டான்
லாவண்யாவின் புருஷன் பிரகாஷ்.
“ என்ன, உங்கம்மா இங்க வந்து இருக்கணும்னு பிரியப் படறாங்களா?”
திடுக்கிட்டு பின் பக்கம் திரும்பிப் பார்
த்த லாவண்யா “ ஆமாங்க..” என்று அசடு வழிந்தாள். “பாவம்ங்க எங்கம்மா !
தனியா இருக்க பயப்படறாங்க. அதான்
இங்க வந்து நம்மோட இருக்க பிரியப்
படுறாங்க. நீங்க சரின்னு சொன்னால்
நாளைக்கே கூட்டிக்கிட்டு வந்துடறேன் .
என்ன சொல்றீங்க?”
“ ம்..அதுவும் சரிதான். இப்போ ஒரு இடம் காலியாகப் போறதில்லயா?..அந்த இடத்தில் உங்கம்மா வந்து இருந்து கொள்ளட்டும்.” வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல் பிரகாஷ் சொல்ல ஆடிப் போனாள் லாவண்யா.
மாமியார் இடத்தில் தன் அம்மா வந்து இருக்கட்டும் ஏன்ற அர்த்தத்தில் புரு ஷன் சொன்னது மனதில் கொஞ்சம் வலியை ஏற்படுத்தியது லாவண்யா விற்கு.
ஏனோ மாமியாரை பிடிக்காமல் போனது லாவண்யாவிற்கு. ஆரம்ப த்தில் நன்றாகப் பழகினாள் . நாள் செல்லச் செல்ல வெறுக்க ஆரம்பித் தாள். புருஷனிடம் மாமியாரைக் கொண்டு போய் ஹோமில் சேர்க்கச் சொல்லியிருந்தாள் லாவண்யா. இத்த னைக்கும் மாமியார் மிக மிக நல்லவள். லாவண்யாதான் சில சமயங்களில் மாமியாரிடம் எரிந்து விழுந்திருக்கி றாள். மாமியார் அக்கடாவென்று அடங்கி ஒடுங்கி இருப்பாள். இதையெ ல்லாம் பிரகாஷ் அறிந்தவையே!
நேரம் வரட்டும், மனைவிக்கு பாடம்
புகட்டலாமென்று ஏண்ணியிருந்
தான். இப்போது வந்தது . சுருக்கென்று
வார்த்தைகளைப் பிரயோகித்தும் விட்
டான் !
சட்டென கலங்கிய கண்களுடன் புரு
ஷனை ஏறெடுத்துப் பார்த்தாள் லாவ
ண்யா.
“ ஸாரிங்க ! தனக்கு வந்தால்தான் திரு
கு வலி தெரியும்கிறத நான் தெரிஞசிக்
கிட்டேன். பட்டால் தான் தெரியறது. என்
னை மன்னிச்சிடுங்க !” புடவைக் தலை
ப்பால் தன் கண்களைத் துடைத்துக்
கொண்டாள் லாவண்யா.
“ சரி, வந்து இருக்கச் சொல்லு.” என்று
கூறிவிட்டு அகன்ற புருஷனை நன்றி
பொங்கப் பார்த்தாள்.
……………………………………………………

வி.கே.லக்ஷ்மிநாராயணன்