பூங்கொத்து வாங்க நேரமில்லை என்று
என் கைகள் குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாள் அவள் !
ஒரு பூந்தோட்டமே என் கைகளில் தவழ்ந்தது போல் இருந்தது... !
' குழலி ' என்ற அவள் இனிய பெயரை நெஞ்சில் பச்சை குத்திய போது வலிக்கவில்லை எனக்கு...
ஊசியால் பச்சை குத்தும்போதெல்லாம் அவள் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தேன்...
நானும், அவளும் இணைந்து நடந்த போது கருப்பு, சிவப்பு நிறத்தில் கூட வானவில் தோன்றுமா..
என கேலி செய்தார்கள் !
உன் நினைவுகள் என்றும் இருக்க வேண்டும் என...
நீ பரிசளித்த கைபேசியில் கூட உன் சிரிப்பொலியை தான் அழைப்பொலியாக அமைத்திருந்தேன்...
இப்போதெல்லாம் கைப்பேசி ஒலியில் நீ சிரிப்பதில்லை...
காரணம் ...
நிறமென்றறிந்து
தீக்குளித்தேன்....
இதோ...
இரத்த சிவப்போடு
உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கிறேன்....
வா ... என்னவளே...
உயிர் பிரியும் முன் ...
ஒரு பார்வை
பார்த்துவிட்டாவது
போ... !

எம்.பி.தினேஷ்
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?