நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு

நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு


 

கராகஸ்: வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார். அவர் மீது போதைப்​ பொருள் கடத்தியதாகவும், சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருந்​த​தாக​வும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.


வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்​புப் படை​யினர் நேற்று முன்​தினம் அதிகாலையில் தாக்​குதல் நடத்​தினர். பின்​னர் அந்​நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ (63) மற்​றும் அவரது மனை​வியை அமெரிக்க படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர், அவர்​களை போர்க் ​கப்பலில் அழைத்​துச் சென்​றனர்.


இந்​நிலை​யில், இரு​வரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகருக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, புரூக்​ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்​தில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது போதைப்​ பொருள் பயங்​கர​வாதம், அமெரிக்கா​வுக்​குள் டன் கணக்​கில் கோகைனை இறக்​குமதி செய்​தது மற்​றும் சட்​ட​விரோத ஆயுதங்களை வைத்​திருந்​தது ஆகிய குற்​றச்​சாட்​டு​கள் சுமத்தப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்​தில் 61 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளி​யிட்டுள்ளது. அதில், மதுரோ அமெரிக்​காவை வம்​பிழுக்​கும் காட்​சிகளும், மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸை​யும் கைது செய்ய நடத்​தப்​பட்ட அதிரடி சோதனைக் காட்​சிகளும் இடம்பெற்றுள்ளன.


அந்த வீடியோ​வில், வெனிசுலா மீதான தாக்​குதல்​கள் குறித்து ட்ரம்ப் நடத்​திய செய்​தி​யாளர் சந்​திப்​பின் காட்​சிகளும் இடம்​பெற்றுள்​ளன. அப்​போது, அமெரிக்க பாது​காப்​புத் துறை அமைச்சர் பீட் ஹெக்​சேத், “மதுரோ வம்​பிழுத்​தார், அதன் விளைவை அனுப​வித்​தார்” என்று குறிப்​பிட்​டார். அமெரிக்காவின் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%