நினைவுகளின் பாலம்

நினைவுகளின் பாலம்


*******************************


வண்ணங்கள் தோய்ந்த நினைவுத் தடங்களில் 

சிந்தனைகளைத் தேக்கி அழகு பார்க்கிறோம் 

ஒவ்வொன்றாய்ப் பிரித்தெடுத்து ஆய்வு செய்ய 

உதவாமல் போகிறது நிகழ் காலம் 

அங்கே தனிமையில் கூவும் குரலுக்குள் 

ஒளிந்திருக்கிறது நம் புரிதலான வாழ்வு 

ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் புரியாத நிலைப்பாடு 

எதிர்நீச்சல் போட்டு கரைசேரப் பார்க்கிறது 

அலைகளோ ஓயாத இரைச்சலை முழக்கமிட்டு 

மணல் பரப்பில் குடியேறப் பார்க்கின்றன

தப்புத் தாளங்களில் மனம் குதூகலித்து  

தன்னையே புதைத்துக் கொள்ளத் துடிக்கிறது 



புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுதல் போல் 

கடந்து போகிறது ஒவ்வொரு நாளும் 

எச்சமிடும் பறவைக்குத் தெரியாது தானும் 

மலைச் சரிவில் விதைப்பதில் முதல்வனென்று 

அமைதிச் சூழலுக்கு வித்திடவே வாழ்கிறோம் 

பிணைப்பின் உறுதிக்கு கட்டியம் கூறுவோம் 

இன்றைய நகர்தலில் புதுமை ஒளிர 

நாளைய மலர்தலில் வாசம் பிறக்கட்டும்  

உறவுகளின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டுவோம் 

நீங்காதத் தடைக் கற்கள் உடைபடட்டும் 

மாசற்றச் சூழலோடு மனிதம் தழைக்க 

நேசமுடன் கைகோத்துப் பயணிப்போம் வா ! 


கா.ந.கல்யாணசுந்தரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%