நாமக்கல் சிலம்ப போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
Aug 01 2025
15

நாமக்கல், ஆக.2-
நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் நடந்தது. . இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அபிநீத், கனிஷ், நிவாஷினி மற்றும் கனிஷ்கா ஆகியோர் முதலிடம் பெற்றனர். மதூலிகா, பிரவஸ்தி ஆகியோர் 2ம் இடம் பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஹரிதா, ரித்தீஸ், கண்ணன் ஆகியோர் 2ம் இடம் பெற்றனர். மிதுலாஸ்ரீ, ரித்திஷ் அஸ்வின் ஆகியோர் 3ம் இடம் பெற்றனர்.
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?