நான் ஒரு தெருப்பாடகன்

நான் ஒரு தெருப்பாடகன்


ஊருக்குள்ளே எனது பெயர் தெருப் பாடகன்!

உள்ளத்தில் இருப்பதை

இசைக்கிற ஒருபாடகன்!

நீருக்குள்ளே வாழுகின்ற

மீனைப் போன்றவன்!

நினைவுகளில் நீந்துகிற

நான்.. தெருப்பாடகன்!


தெருவோடு இரவினிலே

பாடிக்கொண்டுப் போவேன்..

கருவோடு கலந்த கானம் ..இசைத்தப்படிப் போவேன்!

துறவாத துறவியென

தூரங்களைக் கடந்து..

இறவாதக் கவிதையிலே

இசைப்பாடி வருவேன்!


யாருக்கும் பாரமில்லை

யான் தெருப் பாடகன்!

யாவருக்கும் வேண்டியே

பாடல்பாடும் பாடகன்!

தேவருக்கும் மனிதருக்கும்..

தூதுசெல்ல வந்தவன்!

தெருவெங்கும் நடந்தபடி..

தேடிக்கொண்டு சென்றவன்!


சீருக்குள் சிலசமயம் 

என்பாடல் அடங்காது!

சிந்தனைகள் சிறகசைக்க

எப்பொழுதும் முடங்காது!

பேருக்கு ஒரு பாடகனாய்..

நான் வாழ முடியாது!

பேருலகம் கேட்கும்வரை

என்பாடல் முடியாது!


தெருவிளக்கின் வெளிச்சத்தில்..

தேடிக்கொண்டே நடக்கிறேன்! நெருப்பினிலும் நீரினிலும்.. நடந்துப் பாட்டுப் படிக்கிறேன்.! மறுபிறவி இருக்கிறதோ.. தெரியாமலே பிறக்கிறேன்.. மனதநேய பாட்டுப்பாடி என்னை நானே மறக்கிறேன்!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%