இராமநாதபுரம் மாவட்டத்தில் 33 விசைப்படகுகள், 1,456 நாட்டுப்படகுகள் மற்றும் 497 இயந்திரம் பொருத்தப் படாத நாட்டுப்படகுகள் பதிவு செய்யாமல் இயக்கப்பட்டு வருகின்றன என தெரியவந்துள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983-ன் படி பதிவு செய்யாமல் படகுகளை இயக்குவது குற்றமாகும் என்பதால், இவ்வாறான பதிவு செய்யப் படாத நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை வரும் நவம்பர் 30-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்படாத படகு உரி மையாளர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது பகுதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு படகு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?