கும்பகோணம் அருகில் உள்ளது நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் நடைபெறும் கல் கருட சேவை உலகப் பிரசித்தி பெற்றது. ஒரே கல்லால் ஆன கருடர் இக்கோயிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பங்குனி மற்றும் மார்கழி என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே இந்த கல் கருடர் வெளியே வருகிறார்.
பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும்.
இவ்வாலய கருடன் நவ நாகங்களுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பெரிய வரப்ரசாதி. இவர் வீற்றிருந்து அருளும் சன்னிதி பத்து சதுர அடி. இவர் வழிபடும் தெய்வமாக இருக்கும் நேரத்தைத் தவிர, வாகனப் புறப்பாட்டுக்கு புறப்படும் நேரத்தில் இவரது திருப்பாதங்களை நாலு பேர் தாங்குவார்கள். இவர் வெளியே வந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர் சேர்ந்து தூக்குவார்கள். இதுவே முப்பத்திரண்டு எனவும் அறுபத்திநான்கு எனவும் ஆட்கள் சுமந்து கொண்டு படிகளில் இறங்குவார்கள். இது இறுதியில் 128 பேர் இந்த கல் கருடரை சுமந்து செல்வார்கள்.
கல் கருடரை வெளியே வரும்போது எப்படி எடை படிப்படியாக அதிகரிக்கிறதோ அதேபோல் சன்னிதிக்கு திரும்பும்போது கல் கருடன் எடை படிப்படியாக குறையும் அதிசயம் நடைபெறுகிறது. கல் கருடன் சன்னிதிக்கு திரும்பும்போது அவரின் எடை குறைவதற்கு ஏற்ப சுமந்து செல்பவர்கள் எண்ணிக்கையும் 128, 64, 32, 16, 8 என குறைக்கப்பட்டு, இறுதியாக சன்னிதிக்குள் செல்லும்போது கல் கருடனை நான்கு பேர் மட்டுமே gசுமந்து செல்வார்கள். இந்த அதிசய நிகழ்வு நாச்சியார்கோவிலுக்கே உரிய தனி சிறப்பாகும்.
இந்த கல் கருடனை 48 நாட்கள் வழிபட்டால், எல்லாவிதமான நோய்களும் விலகும். நினைத்த காரியம் நடக்கும். திருமணத் தடைகள் விலகும். சர்ப்ப தோஷங்கள் விலகும்.

சிவ.முத்து லட்சுமணன்
போச்சம்பள்ளி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?