என்பதை கேட்பதற்கு வியப்பாக
உள்ளதா. ஆம் என்றால் கீழே
படிக்கவும் . ஒன்றல்ல இரண்டல்ல
சுமார் 300 ஆண்டு காலம் இந்த
கர்ஜுனையை சுற்று
வட்டாரத்தில்
அனைத்து மக்களும் கேட்டு
பதறிப் போனார்கள். அப்படிப்பட்ட
பூமி தான் கீழப்பாவூர் நரசிம்மர்
கோவில். இது திருநெல்வேலி
தென்காசி நெடுஞ்சாலையை ஒட்டி
பாவூர்சத்திரம் என்ற ஊரில் இருந்து
சுமார் இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் இந்த நரசிம்மர் கோவில்
அமைந்துள்ளது. இங்குள்ள
நரசிம்மர் மகாவிஷ்ணுவின்
அவதாரமாக காணப்படுகிறார்.
நரசிம்மர் இரணியனை
கொன்றுவிட்டு இந்த ஸ்தலத்தில்
வந்ததாக ஐதீகம். 1100 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.
நரசிம்மர் ஆக்ரோஷத்துடன்
பதினாறு கரங்களுடன் இரணியனை
தன் மடியில் வைத்து நெஞ்சை
பிளந்து
அமர்ந்து கொண்டு இருக்கும்
வகையில் இக்கோவிலில்
திருஉருவச்சிலை உள்ளது.
ஆதிகாலம் தொட்டு சுமார் 300
ஆண்டுகளுக்கு முன்பு வரை
இங்கு நரசிம்மரின் கர்ஜனை
கேட்டதாக சுற்று வட்டார பகுதிகளில்
கூறுகிறார்கள். அவரது கோபத்தை
தணிக்க கோவில் எதிரே ஒரு
அழகிய தீர்த்த குளம் உள்ளது.
தினசரி மாலை வேளையில்
நரசிம்மருக்கு இளநீர் அபிஷேகம்
செய்து அவரது கோபத்தை
இன்றும் தனித்து வருகிறார்கள்.
நரசிம்மர் இடத்தில் நாளை என்பது
கிடையாது எனவும் அவரை
மனதார அழைத்தால் உடனடியாக
ஓடி வருவார் என்பது இங்குள்ள
மக்களின் அசைக்க முடியாத
. நம்பிக்கை. சுவாதித்திருநாள்
பிரதோஷம் செவ்வாய் சனி நாட்களில்
சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும்
நடைபெறும்.
சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை
மூலிகைத் மூலிகை திரவிய பொடிகள்
இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து
அவரது கோபத்தை தனித்து
மக்கள் ஆனந்தம் அடைகிறார்கள்.
இங்கு நீராஞ்சனம் செய்து
வழிபடுவது சிறப்பு என
சொல்லப்படுகிறது. திருமணத்தடை
நீதிமன்ற வழக்கு கடன் தொல்லை
குடும்ப பிரச்சினை இவர்களுக்கு
சிறந்த பரிகாரத் தலமக
விளங்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது. அக்காலத்தில்
காஷ்யப்ப முனிவர் நாரதர்
வர்ணர் ஆகியோர் வேண்டுகோளுக்கு
இணங்க விஷ்ணு பகவான்
நரசிம்மராக இந்த ஸ்தலத்தில்
அவதரித்தார். அக்டோபர் முதல்
பிப்ரவரி வரை இந்த கோவிலுக்கு
சொல்ல உகந்த நாட்களாகவும்
வடக்கு பார்த்த உள்ள சன்னதியில்
வெங்கடாஜலபதி தன் துணைவியுடன்
நின்றகோலத்தில் காட்சி தருகிறார்
அக்காலத்தில் சாய் ரட்சை போது
இந்த சிம்ம கர்ஜனை தொடர்ந்து
இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்
இந்த கோவிலுக்கு சென்று
பரிகாரம் செய்தால் நினைத்தது
நடக்கும். வாழ்க்கையில் ஒரு
முறையேனும் இந்த கோவிலுக்கு
சென்று வந்தால் நன்மை பயக்கும்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி