கந்தல் துணியோடு அப்பா உழைத்தால்தான்
நீ கணினியிலே கை வைக்க முடியும்....!
அவர் சேத்திலே கால் வைத்ததால்தான்...நாம்
சோத்திலே கை வைக்க முடியும்....!
விவசாயி உழைத்தால்தான்...நாம்
உயிர் வாழ முடியும்...!
குடிப்பகத்தை மூடி....
படிப்பகத்தை திறந்தால்தான்...நாம்
பல சாதனைகள் படைக்க முடியும்....!
தேச பற்று இருந்தால்தான்...நாம்
தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்....!
அம்மா, அப்பாவை உயிராய் நேசித்தால்தான்
நாம் முதியோர் இல்லம் உருவாகாமல் தடுக்க முடியும்....!
வணங்குகின்ற சாமிகூட....நாம்
வாழுகின்ற இந்த பூமில்தான் இருக்கு...
இதை உணர்ந்து விட்டால்
நம் வாழ்வில் என்றும் சொர்க்கம் இருக்கு....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?