யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்​தானை வீழ்த்தியது இந்திய அணி

யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்​தானை வீழ்த்தியது இந்திய அணி


 

துபாய்: யு19 ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்​டித் தொடரின் லீக் ஆட்​டத்​தில் இந்​திய அணி 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்தானை வீழ்த்​தி​யுள்​ளது.


நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று துபா​யிலுள்ள ஐசிசி அகாடமி மைதானத்​தில் நடை​பெற்ற போட்​டி​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 46.1 ஓவர்​களில் 240 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 88 பந்​துகளில் 85 ரன்​கள் குவித்தார். இதில் 12 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் அடங்​கும்.


கேப்​டன் ஆயுஷ் மாத்ரே 38, வைபவ் சூர்​ய​வன்ஷி 5, விஹான் மல்​ஹோத்ரா 12, வேதாந்த் திரிவேதி 7, அபிக்​யான் குன்டு 22, கனிஷ்க் சவு​கான் 46, கிலான் படேல் 6, ஹெனில் படேல் 12, தீபேஷ் தேவேந்​திரன் 1 ரன் எடுத்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் முகமது சயாம், அப்​துல் சுபான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்.


நிகாப் ஷபிக் 2 விக்​கெட்​களை​யும், அலி ராஸா, அகமது ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர். பின்​னர் 241 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடத் தொடங்​கிய பாகிஸ்​தான் அணி 41.2 ஓவர்​களில் 150 ரன்​களுக்கு சுருண்​டது.


பாகிஸ்​தான் அணி தரப்​பில் உஸ்​மான் கான் 16, சமீப் மின்​ஹாஸ் 9, அலி ஹசன் பலோச் 0, அகமது ஹுசைன் 4, கேப்​டன் பர்​ஹான் யூசப் 23, ஹுசைபா அஹ்​சான் 70, ஹம்சா ஜாஹூர் 4, அப்​துல் சுபான் 6, முகமது சயாம் 2, நிகாப் ஷபிக் 2, அலி ராஸா 6 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி வெற்றி கண்​டது.


இந்​திய அணி தரப்​பில் தீபேஷ் தேவேந்​திரன், கனிஷ்க் சவு​கான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். கிஷன் குமார் சிங் 2 விக்​கெட்​களை​யும், கிலான் படேல், வைபவ் சூர்​ய​வன்ஷி ஆகியோர் ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். ஆட்​ட ​நாயக​னாக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றிய கனிஷ்க் சவு​கான் தேர்வு செய்​யப்​பட்​டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%