நடுநிசியில்

நடுநிசியில்


 விலாஸாக்கு திடீரென்று விழிப்பு வந்தது.. சும்மா இல்லை .. யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து.. 


சட்டென்று எழுந்து.. சுவற்றை தடவி லைட்டை போட்டாள்.. நிசப்தம். ஏசியின் சில்லிப்பு.. மெல்லிய ரீங்காரத்துடன்.. 


அப்படியும் அவள்‌ நெற்றியில் வியர்வை முத்துகள்.கனவை உண்மை என்று இதுவரை உணர்ந்ததில்லை..மெல்ல நேரத்தை பார்த்தாள் ..நடு இரவு .. 12.05.. 


 பயன களைப்புடன் இப்பதான் 10 மணிக்கு வந்து படுத்தாள்.. எப்படி இப்படி திடீர் விழிப்பு.. யோசித்தவாறே.. நாளை தன் செமினாருக்கான பாயின்ட்களை அப்படியே மெல்ல நடந்தவாறு ஞாபகப்படுத்திக்கொண்டாள்.. 

தன் தோழி அடுத்த அறையில்.. 

இருவரும்தான் ப்ராஜெக்ட் ப்ரெசென்டேஷனுக்காக தஞ்சையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து தங்கியிருக்கின்றனர்.. எல்லாமே சிங்கிள் ரூம்தான்.. பெண்களுக்கானது.


 ரோட்டின் எதிர் பக்கம் ஆண்களுக்கான வரிசை அறைகள்.அதுவும் சிங்கிள் ரூம்தான்..சற்று காலடி சத்தம் வாசல் பக்கம் கேட்க..தைரியத்தை வரவைத்துக்கொண்டு கதவைத்திறந்தாள்..


பக்கத்து அறையில் யாரோ நுழைந்தது பார்த்து திடுக்கிட்டாள்..அது அவள் தோழி தேஜஸ்வினி தங்கியிருப்பதாச்சே!

ஆனால் எதுவும் வித்தியாச சத்தங்கள் இல்லை..கூச்சல் இல்லை என்றதும் படபடவென்று அடித்த மனது மீண்டும் சமநிலைக்கு வந்தது..


குறுகுறுவென அந்தக்கதவை பார்த்துக்கொண்டேருந்தாள்..படியில் வாட்ச்மேன் வந்து நின்று இவளுக்கு சைகையால் என்ன என்று கேட்டார்..இவள் வேகமாக அவனிடம்..

" இந்த ரூமுக்குள் யாரோ நுழைந்தார்கள்..நான் பார்த்தேன்", என்று சொல்ல..


" நான் முழிச்சிக்கிட்டுதான இருக்கேன்..யாரையும் பார்க்கல. போய் படும்மா..பேய் உலாவுற நேரத்துல காரிடார்ல நிக்கிற..போ உன் ரூமுக்குள்ள..", ஆஜானுபாகுவான அவன் சொல்ல..வேறு வழியின்றி தன் ரூமுக்குள் நுழைந்துதாள்..


மணி 12.35 காண்பித்தது..இப்போ மீண்டும் நிழலுருவம் அந்த கதவின் கீழிடுக்கில் தெரிந்தது.மனசில் பயம் அப்பிக்கொள்ள..கொஞ்சம் நிதானித்த அந்த நிழல் தாண்டி அந்தப்பக்கம் போனதை உணர்ந்தாள்..


எழுவோமா ..பார்ப்போமா என்று நினைக்கையிலியே மீண்டும் அதே நிழல் இவள் ரூம் வாசலில்..அப்படியே தலைவரை இழுத்து போர்த்தி படுத்தவள்தான்..எத்தனை நேரம் நடுங்கிக்கொண்டிருந்தாள்..எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.


காலை 7 மணிக்கு ரூம் கதவு தட்டப்பட..

அவசரமாய் விழித்து கதவை திறக்க, அங்கு தேஜஸ்வினி..வாயில் டூத்பிரஷ்ஷீடன்..


"எந்திரிடி..குளிச்சி கிளம்ப சரியாயிருக்கும்..நான் வரலன்னா எந்திரிச்சிருக்க மாட்ட போல.கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு..", சொன்ன தோழியை ..விருட்டென் ரூமுக்குள் இழுத்தாள்..


"யாருடி உன் ரூமுக்கு நைட் வந்தது..சொல்லு..நான் பாத்தேன்..மறைக்காம சொல்லு!"


என்‌ ரூமுக்கா? ..நீ வேற..நேத்து படுத்த நான் நடுவுல பாத்ரூம் போகக்கூட எழுந்துக்கல..இதுல..நீ வேற பாத்தியா?..கெட்டுச்சி போ.இப்படி யோசிச்சிதான் சரியா தூங்காம கண்ணு செவந்து கிடக்கா..இன்னும் வேணா கொஞ்ச நேரம் தூங்கு..நீதான் விரல்நுனியில செமினார் ஸ்பீச் வெச்சிருப்பியே..என்றவளின் விரல்களில்..அந்த..நெயில் பாலிஷ்.....விலாஸா கண்களில் தென்பட்டுவிட..


அவள் விழி நேராக பார்த்தாள்..

"பிரனவ்தான உன் ரூம் வந்தான்..சொல்லு..இல்லை..இப்பவே நம் HODக்கு சொல்லிடுவேன்..


அவளும் சற்று இவள் விழிகளை நேராய் பார்த்தாள் பின்,அவள் பாத்ரூம்லியே வாய் கொப்பளித்து வந்தாள்..


" எதை வெச்சி இப்படி சொல்ற..சொல்லு.உன் லவ்வர் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா..?" 


" நான் மட்டும்தான்டி லவ்வ சொல்லியிருக்கேன்..அவன் இன்னும் பதிலே சொல்லல..இப்ப நீ சொல்லு ..உங்களுக்குள்ள பழக்கம் இருக்குன்னு ஏன் சொல்லல..சொல்லுடி..!"


" சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணாத..நீ அவனை லவ் பன்றேன்னு எங்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே அவன் என்ட்ட பிரபோஸ் பண்ணி நானும் ஒத்துக்கிட்டேன்.அதை உன்கிட்ட சொல்ல வரும்போதுதான்..நீ அவன் மேல உள்ள ஈர்ப்பை சொன்ன..ஷாக் ஆகிட்டு..நாம L.K.G லேருந்து ஃப்ரெண்டிஸ்டி..நான் எப்படி உன்கிட்ட அந்த சமயம் எங்க லவ்வ சொல்ல முடியும்..?அதான் மறைச்சேன்..


"ச்சீ.உண்மைய சொல்லியிருந்தா ..நான் விலகியிருப்பேன்டி..உங்களை பிரிச்சிடுவன்னு நினைச்சியா.நாமெல்லாம் அடல்ட்ஸ்..இன்னும் L.K.G படிக்கல நாம.."


" ஆமான்டி ..ஆனா, உன் மனசை காயப்படுத்த விரும்பல..உண்மைய சொல்றேன்..நேத்து ப்ரணவ் என் ரூமுக்கு வந்தான்.சும்மா நான்தான் விளையாட்டா, உண்மையான லவ் இருந்தா இப்ப என் ரூமுக்கு வானு சொன்னேன்..


உடனே வாட்மேன்கிட்ட கொஞ்சம் ரூபாவ தள்ளி,உடனே பாத்துட்டு வந்துடுவேன்னு சொல்லிட்டு என் ரூமுக்கு வந்தான்..நீ ரூம் லைட்ட போட்டதும் அவன் பேஜாராயிட்டான்..நான் கதவை திறக்க..சட்னு உள்ள வந்தவன் கம்னு இருந்தான் ..


சைகையில நீ பாத்துட்டேன்னு சொன்னான்..நீ‌ நகருர மாதிரி தெரியல ..எனக்கும் என்ன பன்றதுன்னு தெரியல..கரீக்டா வாட்ச்மேன் டைம் ஆகிட்டேனு பார்க்க மேல வந்தா, நீ நின்னதை பாத்து உன்னை எப்படியோ ரூமுக்குள்ள போக வைக்க..இவன் சட்னு ரூம திறந்து ஓடிட்டான்..


வாட்ச்மேன்தான் ..உன் ரூம் வாசல்ல கொஞ்ச நேரம் நின்னாரு..பிறகு எந்த சத்தமும் இல்லன்ன உடனே எனக்கு கை காமிக்க..நான் கதவை மெல்ல சாத்திட்டேன்.அவரும் பிறகு போயிட்டாரு.."


இதான் நடந்தது..இப்ப சொல்லு அவன்தான் வந்ததுனு‌ நீ எப்படி கெஸ் பண்ணுன..?


"ஏன்னா ..நீயும் நானும் ட்ரெயின்ல ஒரே கலர் நெயில் பாலிஷ்தான் பேசிக்கிட்டே போட்டோம்.ஆனா இப்ப நெயில் பாலிஷ் உன் கையில இல்லை...


இந்த லேடிஸ் ஏன்தான் நெயில் பாலிஷ் போடுறாங்களோனு..அப்ப பிரணவ் கிண்டலடிச்சான்..


அதான் ..நீ அவனுக்காக போட்டத ரிமூவ் பண்ணியிருக்க..ரைட்டா..?


இன்னும் ஒன்னு ..அந்த வாட்ச்மேன் என்னைய விரட்டுனதும் நான் ரூம் உள்ளே வந்தாலும் சின்ன இடுக்குல பாத்துட்டுதான் இருந்தேன். ஓடுன ஆள் பிரனவ்னு மனசுக்கு தோணுச்சி.இப்ப உன் நகம் கன்ஃபர்ம் பண்ணிடுச்சி.. 


நான் கதவை சாத்தின பிறகும் நிழல் தெரிஞ்சப்பதான் பயமா இருந்தது.வாட்ச்மேன் இல்ல பிரனவ் யாரோ ஏன் இங்க நிக்கனும்னு ஒரு பீதி.."


" சாரிடி.. எங்க காதல உன்கிட்ட மறைச்சது தப்புதான்..மன்னிச்சிடுடி.ஆனா..உன்னுள்ளே ஒரு துப்பறிவாளி இருக்கா போல ".


 "ஆமா..வாளி இருக்கா..

என்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு உண்மைய சொல்லலங்கிறத நான் நம்புறேன்..காதலர்கள் வாழ்க..ஆனா இப்படி நடுராத்திரி 

ரூமுக்கு வரதெல்லாம் ரொம்ப ஓவருடி.."


" அந்த ரொமான்ஸதான் நீ முழிச்சி கெடுத்தியே", தேஜஸ்வினி அவள் முதுகில் செல்லமாய் அடிக்க..


"அடுத்த முறை வர சொல்லு..காவலுக்கு நிக்கிறேன்..ஆளை பாரு.."..இருவரும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தனர்..


முற்றும்


தஞ்சை பியூட்டிஷியன் 

 உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%