தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை:

தமிழக அரசால் நடத்​தப்​பட்டு வரும் தோழி விடு​தி​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்​டும் என்று மனிதநேய மக்கள் கட்​சித் தலை​வர் எம்​.ஹெச்​. ஜ​வாஹிருல்லா வலி​யுறுத்​தி​யுள்​ளார்.


இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசால் நடத்​தப்​படும் தோழி விடு​தி​களில் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வந்​துள்ள ஆயிரக்​கணக்​கான பணிபுரி​யும் பெண்​கள் வசித்து வரு​கின்​றனர்.


இந்​நிலை​யில், தோழி விடு​திகளில் மாத வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்​டிருப்​பது, அப்​பெண்​களுக்கு பெரும் வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பெண்​களுக்​கு பாது​காப்​பான மற்​றும் மலி​வான தங்​குமிட வசதி​களை வழங்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தான் திமுக அரசு இந்த விடு​தி​களை தொடங்​கியது.


ஆனால் தனி​யாக ஜிஎஸ்டி வசூலிக்​கப்​படு​வ​தால், பல விடு​தி​களில் மாத வாடகை தற்​போது ரூ.1,000-க்​கும் மேல் கூடு​தலாகி​உள்ளது. உதா​ரண​மாக, அடை​யாறில் இரு​வர் தங்​கும் குளிர்​சாதன வசதி இல்​லாத அறை வாடகை ரூ.5,800-ல் இருந்து ரூ.6,844-ஆக உயர்ந்துள்ளது.


தாம்​பரத்​தில் வாடகை ரூ.9,200-ஆக உயர்ந்​துள்​ளது. இந்த உயர்வு அங்கு தங்கி பணிபுரி​யும் பெண்​களுக்​கும், உயர்​கல்விக்​காக தயாராகும் பெண்​களுக்​கும் நிதிச்​சுமை​யாக மாறி​யுள்​ளது. இந்த விடு​தி​கள் ஆடம்​பரத் தங்​குமிடங்​கள் அல்ல.


சமூக நலத் திட்​டங்​களின் ஓர் அங்​கம் என்​ப​தால், அவற்றை ஜிஎஸ்டி வரம்​புக்​குள் கொண்டு வரப்​கூ​டாது. பெண்​களை சுய​சார்புடைய​வர்​களாக உரு​வாக்க வேண்​டும் என்ற அரசின் நோக்​கத்தை நிறைவேற்​றும் வகை​யில், அவர்​களது நிதிச்​சுமையை ஜிஎஸ்டி வரி சுமத்தி கூட்​டக் கூடாது. மத்​திய அரசு தோழி விடு​தி​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க முன்​வர​வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%