தோள் கொடுப்பாள் தோழி

தோள் கொடுப்பாள் தோழி

 🌸


துவண்டு நிற்கும் தருணங்களில்

துணிவூட்டும் வார்த்தைகள் கூறி 

தோள் கொடுப்பாள் தோழி…


கண்ணீர் சொல்லும் முன்

கண் மொழி புரிந்து

மௌனத்தையே மருந்தாக்கும் மாயமறிந்தவள்


நேசங்கள் விலகிய போதும்

நெஞ்சத்தின் சுமை சுமந்த

பெயரில்லா தேவதையவள்


நிழல் விலகும் நேரத்திலும்

ஒளியாக அருகில் நின்ற

நிலவாக அவள் 


பயத்தில் பாதை மறந்தாலும்

தோல்வியைப் படியாக மாற்றும்

தன்னம்பிக்கைத் தோழியவள்


அவள்...

வாழ்வின் வரமாக வந்தவள்💛

வாழ்வை வளமாக்கியவள்💛


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%