தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது; அதிபர் ஜின்பிங்கிற்கு டிரம்ப் சர்டிபிகேட்

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது; அதிபர் ஜின்பிங்கிற்கு டிரம்ப் சர்டிபிகேட்


 

வாஷிங்டன்: தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது. தாக்கினாலோ, ஆக்கிரமித்தாலோ சீனாவுக்கு விளைவுகள் தெரியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு, கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள கியோங்ஜு நகரில் நடந்தது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் கொரியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசியிருந்தார்.


அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு, அமெரிக்க வேளாண் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து சீனா சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த ஒட்டுமொத்த வரியில், 10 சதவீதத்தை குறைத்தார் டிரம்ப்.


இந்நிலையில், தைவானை சீனா தாக்கினால், அமெரிக்க படைகள் தைவானை பாதுகாக்க உத்தரவிடுவீர்களா என்ற கேள்விக்கு அதிபர் டிரம்பிடம் எழுப்பப்பட்டது. இதற்கு அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் குடியரசுக் கட்சி தலைவர் பதவியில் இருக்கும் வரை, தைவானை இணைக்கும் அதன் நீண்ட கால இலக்கை நோக்கி சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காது.


 தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பேச்சுவாரத்தையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய தைவான் பிரச்னை குறித்து விவாதிக்கப்படவில்லை. இந்த பேச்சு பெரும்பாலும் அமெரிக்க- சீன வர்த்தக பதட்டங்களை மையமாக கொண்டது.

தைவான் மீது சீனா நடவடிக்கை எடுக்காது. தைவானை தாக்கினாலோ, ஆக்கிரமித்தாலோ சீனாவுக்கு விளைவுகள் தெரியும். சீன அதிபர் ஜி ஜின்பிங் நிலைமையை நன்றாக புரிந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


உதவும் அமெரிக்கா!

சீனா, கிழக்கு ஆசிய நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை ஒட்டிய கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவின் உதவியை தைவான் நாடி இருந்தது.


இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிடம் இருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு தேவையான ஆயுத உதவிகளை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. அதேநேரத்தில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஆயுத உதவிகளை அமெரிக்கா குறைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%