தேஜ கூட்டணியில் புதுவரவு இபிஎஸ் தான் மீண்டும் சொல்கிறார் தினகரன்
Jul 30 2025
15

திருச்சி, ஜூலை 31-
தேஜ கூட்டணியில் நான் ஏற்கனவே இருக்கிறேன். இபிஎஸ் தான் தனித்து சென்று திரும்பி உள்ளார் என்று தினகரன் மீண்டும்கூறினார்.
இதுகுறித்துதிருச்சியில் நேற்று நிருபர்களிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது-
2014-ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள்(அமமுக) இருக்கிறோம். பாஜக கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதில் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. கடந்த எம்.பி. தேர்தலில் அவர்தான் தனித்து சென்று, 3-வது அணியாக போட்டியிட்டார். தற்போது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் தலைமை யார் என அமித்ஷா கூறிப்பிட்டாரோ அது தான் எனது கருத்தும்.
அதிமுகவுக்கும் எங்களுக்கும் முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டும் என்றால், 3-வது மொழியை கற்றுத் தர வேண்டும். அது இந்தி மொழி என்பது அல்ல. இந்தி மொழி மட்டுமே கட்டாயம் என்றால், அதை நாங்களும் எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
==
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?