துளிப்பாக்கள்

துளிப்பாக்கள்


நிறைந்து வழிந்தது

கோவில் உண்டியல்

மக்கள் வேண்டுதல்கள்!


குடிசைக்குள் மழை

கோணிச் சாக்கு

குடிசைவாசிக்கு குடை.


முன்னும் பின்னும் போய்

தறிநூல் சோறு போடுகிறது!

நெய்யும் நெசவாளிக்கு.


அழகிய ரோஜா இதழ்களை

முத்தமிட்டு செல்கிறது

தென்றல் காற்று!


ஓவியத்தில் கிளி

பேசிக் கொண்டிருந்தது

குழந்தையின் மனதோடு!


பூ.சுப்ரமணியன்

பள்ளிக்கரணை, சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%