தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு


திருவனந்தபுரம்: தீ​விர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​துள்​ளார்.


கேரளா​வில் வறுமை ஒழிப்பு திட்​டம் கடந்த 2021-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மாநிலம் முழு​வதும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் 64,006 குடும்​பங்​கள் தீவிர வறுமை​யில் வாடு​வது தெரிய​வந்​தது. இது மாநில மக்​கள் தொகை​யில் 0.2 சதவீதம் ஆகும். அவர்​களை வறுமை​யில் இருந்து மீட்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.


பல்​வேறு குடும்​பங்​களுக்கு வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. நிலமற்ற குடும்​பங்​களுக்கு நிலங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டன. சுயதொழில் தொடங்க நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. ஆயிரக்​கணக்​கானோருக்கு திறன்​சார் பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன. இதன்​காரண​மாக 64,006 குடும்​பங்​களும் தீவிர வறுமை​யில் இருந்து மீண்​டன.


கேரளா உதய​மான தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி நடை​பெற்ற சிறப்பு சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில், தீவிர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா மாறி​யிருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் அறி​வித்​தார்.


இதை பிர​தான எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் ஏற்​றுக் கொள்​ள​வில்​லை. ஆளும் மார்க்​சிஸ்ட் கூட்​டணி அரசு மக்​களை ஏமாற்​று​வ​தாக எதிர்க்​கட்சி தலை​வர் சதீசன் குற்​றம் சாட்​டி​னார். முதல்​வரின் அறி​விப்​புக்கு எதிர்ப்பு தெரி​வித்து காங்​கிரஸ், கூட்​டணி கட்​சி எம்​எல்​ஏக்கள் வெளிநடப்பு செய்​தனர்.


கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் நேற்று மாலை கேரள உதய தின விழா கொண்​டாடப்​பட்​டது. இந்த விழா​விலும், தீவிர வறுமை இல்​லாத மாநில​மாக கேரளா உரு​வெடுத்​திருப்​ப​தாக முதல்​வர் பின​ராயி அறி​வித்​தார்.


அப்​போது அவர் பேசும்​போது, “கேரளா வரலாற்​றில் புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது. தீவிர வறுமை இல்​லாத மாநில​மாக மாறி​யிருப்​ப​தால் ஒவ்​வொரு மலை​யாளி​யின் தலை​யும் நிமிர்ந்திருக்​கிறது. ஏழை குடும்​பங்​களின் முன்​னேற்​றத்​துக்​காக பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த வறுமை ஒழிப்பு திட்​டங்​கள் தொடர்ந்​து நிறைவேற்​றப்​படும்” என்​று தெரி​வித்​தார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%