தில்லியில் நவம்பர் 10ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தில்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செவ்வா யன்று அமலாக்கத்துறை 24 இடங்களில் சோதனை நடத்தியது. ஹரியானாவின் பரீதாபாத்தில் அமைந்துள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம், தில்லி மற்றும் பரீதாபாத்தில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சோதனை நடைபெற்ற இடத்தில் 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் அம லாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனால் சோதனையில் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் வெளி யாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?