திருமலை திருப்பதியில் ஒரு மாதம் ஆண்டாள் திருப்பாவை ஒலிக்கும்

திருமலை திருப்பதியில் ஒரு மாதம் ஆண்டாள் திருப்பாவை ஒலிக்கும்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமாக அதிகாலையில் முதல் உற்சவமாக சுப்ரபாத சேவையும், இரவில் கடைசியாக ஏகாந்த சேவையும் நடைபெறுவது வழக்கம். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படாது. அதற்குப் பதில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை பாசுரங்கள் ஒலிக்கும். அதோடு இன்னும் சில தனித்துவமான உற்சவங்களும் மார்கழியில் நடத்தப்படும். வழக்கமாக மார்கழி மாதத்தின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை, அதாவது போகி பண்டிகை வரை திருமலை திருப்பதியில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுர பாராயணம் நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாதம் டிச.16 ஆம் தேதி துவங்கினாலும், அன்றைய தினம் பகல் 1.23 மணிக்குத்தான் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதம் பிறக்கிறது. அதனால் இந்த ஆண்டு மார்கழி 2 ஆம் தேதியான டிச.17 ஆம் தேதி துவங்கி, ஜனவரி 14 ஆம் தேதி வரை திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் அருளிய 30 திருப்பாவை பாசுரங்களும், தினம் ஒன்றாக அதி காலையில் பாடப்படும். இந்த வழக்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மட்டுமின்றி நாடு முழுவதி லும் இருக்கும் அனைத்து வைணவ திருத்த லங்களிலும் புனித மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்க மாகும். பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மார்கழியில் துளசி இலைகளை கொண்டுதான் ஏழுமலையானுக்கு சகஸ்ர நா அர்ச்சனை செய்வார்கள். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் ஏழுமலையானுக்கு தமிழகத்தின் திரு வில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட கிளி களின் மாதிரிகளை வைத்து அலங்கரிப்பார்கள். மார்கழி மாதம் முழுவதும் கையில் கிளி ஏந்திய படி காட்சி தரும் ஏழுமலையானுக்கு வில்வ இலை களை கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை நடத்தப் படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%