மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை: மக்களவையில் நிர்மலா சீதாராமன் உறுதி

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை: மக்களவையில் நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடெல்லி, ஆக.12-


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா? என நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது அவர், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.


இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-


கடுமையான நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அரசு விலகி விட்டது.


அதற்கு மாறாக கொண்டு வரப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு சார்ந்த திட்டம் ஆகும். இது கடந்த 2004 ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்குப்பிறகு பணியில் சேர்ந்த ஆயுதப்படைகள் அல்லாத மத்திய அரசு பணியாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்காக, தேசிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னாள் நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டது.


இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


உறுதி செய்யப்பட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதை உறுதி செய்யும் அதே வேளையில், நிதி நிலைத்தன்மையையும் பராமரிக்கும் வகையில், குடும்ப வரையறை உள்பட இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்கள் வகுக்கப்பட்டன.


தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கிழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் மரணம் அல்லது தகுதி நீக்கம் அல்லது ஊனமடைதலின்போது மத்திய சிவில் சர்வீஸ் (ஓய்வூதிய) விதிகள், 2021 அல்லது மத்திய சிவில் சர்வீஸ் (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள் 2023-ன் பலன்களையும் பெற முடியும்.


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கடந்த ஜனவரி 24-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு மூலம் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதி வாய்ந்த சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுவதற்கு முன், 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில்50 சதவீதத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு உறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவு அனுமதிக்கப்படும். இதை விட குறைந்த தகுதி வாய்ந்த சேவை காலம் இருந்தால், விகிதாசார கொடுப்பனவு அனுமதிக்கப்படும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%