திருப்பூர் அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் போதை விழிப்புணர்வு

திருப்பூர் அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் போதை விழிப்புணர்வு

திருப்பூர், ஆக. 12–-


திருப்பூர் அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமாக போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர் அரசு கல்லூரி மாணவர்கள், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -2 மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையுடன் இணைந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சியுடன் கூடிய போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.


நிகழ்வுக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் தெய்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


போதை என்பது நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் அரக்கன். இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறி யாகிறது. போதையினால் சுயமரியாதையை இழந்து, சமூகத்தில் அவப்பெயர் ஏற் படுகிறது. போதை என்பது நாம் விலை கொடுத்து வாங்கும் விஷமாகும். இத்தகைய கொடிய போதைப்பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசிற்கு துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.


உதவி ஆய்வாளர் பொன்மணி வாழ்த்துரை வழங்கினார். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன் குமார், ரேவதி, திவாகர், லோகேஸ்வரி, பூபதி ஆகாஷ் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


மேலும் துண்டு பிரசுரம் கொடுத்தும், போதையை ஒழிப்போம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பேரணி சென்றும் அங்குள்ள பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%