சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளை ஜப்தி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை

சின்னாளபட்டி, ஆக-.12-–
சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளை ஜப்தி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டவி ரோதமாக வீடுகளை ஜப்தி செய்வதாக நிதி நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்புகார்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார். அப்போது, நிதி நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
வத்தலக்குண்டு, தேனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்படும் நிதி நிறுவனங்கள், கிராம மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, வீடுகளை அடமானம் வைத்து கடன் கொடுத்து வருகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தும் போது முறையாக ரசீதுகள் வழங்குவதில்லை எனவும், இதனால் எவ்வளவு பணம் பாக்கி உள்ளது என்பது மக்களுக்குத் தெரியாமல் இருப்பதாகவும் புகார்கள் கூறுகின்றன.
அமைச்சர் எச்சரிக்கை
சம்பந்தப்பட்ட புகார்களின் அடிப்படை யில், அமைச்சர் ஐ.பெரியசாமி நிதி நிறுவனங் களுக்கு எச்சரிக்கை விடுத்தார். வீடுகளை ஜப்தி செய்ய வரும்போது மனிதாபிமா னத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நடந்துகொள்ளாத நிறுவனங்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு வீட்டினை அதன் உரிமையாளர்கள் இல்லா தபோது பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். உடனடியாக, உயர் அதிகாரிகளிடம் இது குறித்து விசாரணை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
வீடுகளை இழந்தவர்கள் முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?