திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்தமாதம் ரூ.3.84 கோடி காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலில்  கடந்தமாதம் ரூ.3.84 கோடி காணிக்கை



திருச்செந்தூர், ஆக.2

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.3.84 கோடி கிடைத்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மாதம் தோறும் எண்ணப்படுகிறது. ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கைகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. உண்டியல் என்னும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதில், நிரந்தர உண்டியல் மூலம் காணிக்கையாக ரூ.3 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 297, தங்கம் 1,530 கிராம், வெள்ளி 22,500 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 833 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த மாதம் திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நடந்ததால் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திருச்செந்தூருக்கு முருகனை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

==

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News