திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்
Jul 10 2025
81

திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக தங்கக் கடத்தல் அதிகமாக நடக்கும் இந்த விமான நிலையத்தில், தற்போது உயர்ரக கஞ்சாவை கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமையில், 11.8 கிலோ எடைஉள்ள ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா இருப்பது தெரியவந்தது. ரூ.12 கோடி மதிப்பிலான அந்த உயர் ரக கஞ்சாவைப் பறிமுதல் அதிகாரிகள், அதை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?