திருச்சி- மாதவரத்துக்கு தினமும் ஏசிபஸ் துவக்கம்

திருச்சி- மாதவரத்துக்கு  தினமும் ஏசிபஸ் துவக்கம்


திருச்சி, ஜூலை 31-

திருச்சியில் இருந்து நாள்தோறும் மாதவரத்துக்கு அரசு குளிர்சாதன பேருந்து சேவையை நேற்று 6 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் மாதவரம் முதல் திருச்சி வரை 2 புதிய குளிர்சாதனப் பேருந்து சேவைகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக வாரியத் தலைவர் கவுதமன், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் குணசேகரன், திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை மாதவரத்தில் இருந்து பிற்பகல் 12.15, 2.15 மணிக்கு அரசு குளிர்சாதன பேருந்துகள் திருச்சிக்கு புறப்படும். 

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து நாள்தோறும் இரவு 9.50, 11.25 மணிக்கு குளிர்சாதன பேருந்துகள் மாதவரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%