திருச்சி காவலர் குடியிருப்பு படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது: அண்ணாமலை

திருச்சி காவலர் குடியிருப்பு படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது: அண்ணாமலை


 

திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.


இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.


முதல்வர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.


கொச்சியில் திடீரென இடிந்த நீர்த்தேக்கத் தொட்டி: மொத்தமாக வெளியேறிய 1.3 கோடி லிட்டர் தண்ணீர்

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%