திமுக திட்டங்களை காப்பியடிக்கும் பழனிசாமி அமைச்சர்கள் எஸ். ரகுபதி, டி.ஆர்.பி. ராஜா காட்டம்
சென்னை, ஜன. - திமுக அரசின் சாதனைத் திட்டங்களை காப்பியடித்து தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி யுள்ளார். அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித் துள்ள பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2000 ரூபாய், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்துள்ளார்; கலைஞர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக மறைமுகமாக நற்சான்றிதழ் வழங்கியுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறி யுள்ளார். புதிதாக எதையும் வாக்குறுதியாக தர இயலாத நிலைக்கு சென்றுவிட்ட பழனிசாமி திமுக திட்டங்களை காப்பி பேஸ்ட் செய்து வாக்குறுதியாக அறிவித்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தார். “திமுக அரசின் பழைய திட்டங்களை நகலெடுத்து அறிவிப்பு களை வெளியிடுகிறது அதிமுக!” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் விமர்சித்துள்ளார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நகலெடுத்து அறிவிப்பு வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. 2021-ல் திமுக தேர்தல் அறிக்கையை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியதை நினைவு படுத்திய அவர், அதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார். எனவே, புதிதாக எதுவும் சிந்திக்க திறனில்லாமல் திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக!” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சாடியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?