ஜனவரி 21ந் தேதி கோவையில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
கோவை, ஜன. –
தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் (என்ஏபிஎஸ்) கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், கோவை மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (பிஎம் நாம்), கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஜனவரி 21 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறு வனங்கள் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன. முகாமில் தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (நாக்) வழங்கப்படும்.
நாக் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுவதோடு, வயது வரம்பில் கூடுதல் ஒரு ஆண்டு சலுகையும் அளிக்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் நாக் பெற்ற வர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
தொழிற்பழகுநர் பயிற்சிக்காலத்தில், தொழில் பிரிவுகளுக்கேற்ப உதவித்தொகை நிறுவனங்களால் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், கோவை – 29 ஆகியோரை 95665 31310, 94864 47178 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?